No results found

    குழந்தைகளுடன் பாசமாக பழகும் நாய் இனங்கள்..


    நாய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது, நன்கு புசு... புசு... என்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த வகை நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போலவே இருப்பதால், அவற்றுடன் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். அதேபோல கோல்டன் ரிட்ரைவர், லாப்ரடார், பூடில், சிஸ்டூ, கோமண்டர், கோம்பை... போன்ற நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை. இவற்றால் குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தைகளுடன் விளையாடக்கூடிய நாய் இனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..! 

    1. சிஸ்டூ (shiz tuz) இந்த வகை குட்டி நாய்கள்தான், குழந்தைகளின் செல்லப்பிராணி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. இவை அழகானவை. துறுதுறுவென இருப்பவை. பிடித்து விளையாடும் அளவிற்கு, முடிகள் வளர்வதால் குழந்தைகளின் சிகை அலங்கார விளையாட்டிற்கு ஏற்றவை. வீட்டில் வளர்ப்பது தொடங்கி, வாக்கிங் அழைத்துச் செல்வது, கடற்கரையில் விளை யாடுவது, வெளி இடங் களுக்கு சென்றால் கையோடு தூக்கிச் செல்வது... என எல்லா வகையிலும், இது 'பெஸ்ட் சாய்ஸ்'.விலை: ரூ.10 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. 

    2. பூடில் (poodle) இதுவும், குட்டியாக இருக்கும் நாய்தான். சிஸ்டூ அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிறைய வீடுகளில் பூடில் வளர்கிறது. சிஸ்டூவின் செல்ல சேட்டைகள், எல்லாமும் இந்த பூடில் நாய் இனத்திலும் எதிர்பார்க்கலாம். குழந்தை களோடு விளையாடுவது, பாசம் காட்டுவது... என உயிருள்ள விளையாட்டு பொம்மை போல இது செயல்படும். விலை: ரூ.40 ஆயிரத்தில் தொடங்குகிறது 

    3. கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever) இவை வெளிநாடுகளில், பெரும்பாலான குடும்பங்களில் வளர்க்கப்படும் வகை. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரிடமும் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக புசு... புசு.. என்று இருக்கும். இவை ரிட்ரைவர் வகையை சார்ந்தவை. அதாவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி எறிந்தால், அதை தேடி சென்று கவ்விக் கொண்டு வந்து நம்மிடமே சேர்த்துவிடும்.விலை: ரூ.15 ஆயிரத்தில் தொடங்குகிறது 

    4. லாப்ரடார் (Labrador retriever) இது ரொம்பவும் கிளாசிக் நாய் இனம். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நாய் என்று சிந்தித்தாலே, இந்த லாப்ரடார் ரிட்ரைவர் வகைகள்தான், முதலில் நினைவில் தோன்றும். வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இவை பெரும்பாலான வீடுகளில் வளர்ந்து வருகிறது. விலை: ரூ. 7 ஆயிரத்தில் தொடங்குகிறது 5. கோம்பை (kombai) இது நம் தமிழ்நாட்டின் அடையாளம். நாட்டு நாய்களில் இதுவும் ஒன்று. மற்ற எல்லா நாட்டு நாய்களை விடவும், இவை குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும். பாசமாக பழகும். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி, விசுவாசமாக இருக்கும். விலை: ரூ.10 ஆயிரத்தில் தொடங்குகிறது

    Previous Next

    نموذج الاتصال