No results found

    குழந்தைகள் அழுது அடம் பிடித்தால் என்ன செய்ய வேண்டும்...


    குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை கேட்டு அடம்பிடிப்பது இயல்பானது. அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும் அனுமதி கேட்பார்கள். அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அழுது அடம்பிடிப்பார்கள்.

    அப்படி அழுது அடம்பிடித்த உடனேயே அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தவறான செயலாகும். அவர்கள் விரும்பும் பொருட்கள், விஷயங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறானது. எதற்காக மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அதிகரித்துவிடும். அது அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மீதான நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும்.

    'நீ அழுது அடம்பிடிப்பதற்காக உன் விருப்பப்படி எதுவும் செய்ய மாட்டேன்' என்று அவர்களுடன் விவாதம் செய்வதும் கூடாது. அது பலனும் தராது. ஏனெனில் அதனை காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் அது குறித்து பேசாமல் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் குறித்து பேசி, அதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். அந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கான காரணத்தை விளக்கி புரியவைத்துவிடலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடும்.

    Previous Next

    نموذج الاتصال