No results found

    குழந்தைகளின் பிரிவும்... பெற்றோரின் மனநிலையும்....


    கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் வரை இருப்பதை பார்க்க முடியும்.. அதன் பிறகு குடும்பத்திற்கு இரண்டு அல்லது ஒரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.அதேபோல் எனக்கு இருக்கும் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ளவே ஒரு நாள் முழுவதும் சரியாக இருக்கின்றது என்று பல தாய்மார்கள் கூறுவதைப் பார்க்க முடிகின்றது..

    இதுபோல குழந்தைகளின் மேல் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தாய்மார்கள் குழந்தைகள் தங்களை விட்டு பிரிந்து படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் என்று தனியாக செல்லும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் "எம்டி நெஸ்ட் ஸிண்ட்ரோம்" அதாவது வெற்றுக் கூடு என்னும் மனதளவிலான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.கூட்டைவிட்டு பறவைகள் பறந்து சென்றவுடன் கூடு எப்படி தனியாக இருக்கிறதோ அதைப்போல வீட்டில் பேசிச் சிரித்து, கொஞ்சி மகிழ்ந்த குழந்தைகள் வீட்டை விட்டு பெற்றோர்களை விட்டு சென்றவுடன் பெற்றோர்களின் மனது வெற்றுக் கூடு போல் ஆகிவிடுகின்றது..

    குழந்தைகளும் வளர்ந்து படிப்பு, வேலை அல்லது திருமணம் காரணமாக பெற்றோர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது..இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளைப் பிரிந்து மனதளவில் அதிகம்பாதிக்கப்படுவது பெற்றோர்களில் தாய்மார்களே என்று சொல்லலாம். நம்முடைய குழந்தைகள் நம்மை விட்டு தனியே சென்று எப்படி வாழ்க்கையை வாழப் போகிறார்கள்? அவர்களை நம்மைப் போல் யார் கவனித்துக் கொள்வார்கள்? அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் செல்வார்களா?சரியான நேரத்திற்கு தங்கும் இடத்திற்கு திரும்பி விட்டார்களா?நாம் இவ்வளவு நேரம் முயற்சி செய்தும் ஏன் இன்னும் தொலைபேசியை எடுக்கவில்லை?நாம் சொல்வதை எங்கே கேட்கிறார்கள்?நமக்கு என்று வாழ்க்கையில் இனி என்ன இருக்கின்றது? இதுபோன்ற பல கேள்விகளும், விரக்தியான எண்ணங்களும் பெண்களுக்கு ஏற்படுகின்றது..

    ஒரு குறிப்பிட்ட வயது வரை நம்மையே சார்ந்திருந்த பிள்ளைகள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்மைச் சாராது தன்னிச்சையாக முடிவெடுக்கும் பொழுது அதை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். ஒரு பெற்றோராக உங்கள் பங்கு மாறிவிட்டது ஆனால், முடிவடைந்து விடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்.அவர்களுடைய எல்லா முடிவுகளையும் அவர்களே தன்னிச்சையாக எடுக்கக்கூடிய வயதை எட்டி விட்டார்கள்..அவரவர்களுக்கு என்று தனிப்பட்ட நேரம் தேவைப்படுகின்றது..நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும் பிள்ளைகளால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவாக சிந்தியுங்கள்.

    Previous Next

    نموذج الاتصال