No results found

    ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும் போது தந்தை சொல்லி கொடுக்க வேண்டியவை


    குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு.

    ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும். மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர்.

    மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம். பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும். 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பையின் செயல்பாடுகள், விந்து வெளியேற்றம் பற்றி சொல்லிக்கொடுங்கள். 'பிறப்புறுப்பை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?', 'ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?' என்பது குறித்தும் அப்பாக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதில், ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னாளில் குழந்தை அப்பாக்களுடன் பேசுவதை சௌகரியமாக உணரும். ஆண் குழந்தையின் வித்தியாசமான செய்கைகள் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு குழந்தையால் இயல்பாக மற்ற வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள்.

    Previous Next

    نموذج الاتصال