No results found

    குழந்தையின் நலமான வளர்ச்சியில் ஏற்படும் சில பிரச்சனைகள்


    குழந்தையின் ஊட்டச்சத்து உணவும், அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள், தூக்கத்தில் சிறுநீர்கழித்தல், ஓடி விளையாடாமல் இருப்பது, தூங்காத குழந்தை, குழந்தைகளின் அதிக டிஜிட்டல் பாவனை போன்ற குழந்தையின் வளர்ச்சியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படும்.

    இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் என்று மிரட்டி வதைக்கிறார்கள். அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். குழந்தை ஏதாவது தவறு செய்தால், உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் அந்த தவறை குழந்தைக்கு புரியும் விதத்தில் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால் இன்னொருமுறை அந்த தவறை குழந்தை செய்யாமல் கற்றுக் கொள்ளும்.

    குழந்தையை அடிப்பதலோ அல்லது குரலை உயர்த்திக் கத்துவதாலோ குழந்தை தன் தவறை புரிந்து கொள்ளபோவதில்லை. இந்த இரண்டுமே குழந்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்லாது. தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு. நிம்மதியான நல்ல தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும். உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.

    குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள். இக்காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சியோடு அறிவாற்றல், உணர்ச்சிகளின் வெளிப்பாடு,சமூக உறவுகளின் விரிவு ஆகியன வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும். இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இக்காலத்தில் ஏற்படும்வாசிப்பு பழக்கமானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும். குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில் குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.

    உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள். பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை உள்ளூர நன்கு பாதிக்கும் என்பதை எப்போதும் பெற்றோர் கருத்தில் வைத்திருக்க வேண்டும். அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.ஆசிரியர்களின், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர் என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெறுப்பூட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

    Previous Next

    نموذج الاتصال