மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தரும் மனப்போராட்டத்துக்கான தீர்வாக அமைந்தது எமோஷனல் இன்டெலிஜன்ஸ் எனும் உணர்வுசார் நுண்ணறிவு இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் நுணுக்கங்களை இன்றைய பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்தால் நாளைய உலகம் சிறப்பாக அமையும்.
மனிதனின் 90 சதவீத மூளை வளர்ச்சி பிறந்தது முதல் 6 ஆண்டுகளில் நடைபெறுகிறது. எனவே 6 வயதுக்குள் குழந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதை பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம். குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொணடு தன்னம்பிக்கையோடு அவர்களை வளர வழிகாட்ட வேண்டும். பெற்றோருக்கு சொல்லவிரும்புவது பத்தில் ஒன்பது இந்திய குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இம்மாதிரி சூழ்நிலையில் பெற்றோர் தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்குமட்டும் தங்களுடைய குழந்தைகளை தயார் செய்யும் மனப்பாங்கு தவறானது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான முறையில் அவர்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய அறிவையும், அனுபவத்தையும் குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமானது. உணர்வுசார் நுண்ணறிவுடன் வளரும் குழந்தைகள் தேர்விலும் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் போதும். அவர்களது குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும்.